ஒரு நாளைக்கு ரூ.1600 கோடி சம்பாதித்த கௌதம் அதானி: அம்பானியை முந்திய அசுர வளர்ச்சி!

கெளதம் அதானி
கெளதம் அதானி

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி கடந்த ஆண்டில் சராசரியாக நாளொன்றுக்கு ரூ.1,600 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளார் என்று ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் தெரிவித்துள்ளது.

IIFL Wealth Hurun India Rich List 2022ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக ஆனார். கடந்த ஆண்டில் நாளொன்றுக்கு ரூ.1,612 கோடி சம்பாதித்து, ரூ.10,94,400 கோடி சொத்துக்களுடன், அதானியின் நிகர சொத்து மதிப்பு இப்போது முதலிடத்தில் உள்ளது. இது அம்பானியை விட 3 லட்சம் கோடி ரூபாய் அதிகம்.

துறைமுகம், விமான நிலைய ஆபரேட்டர், பசுமை எரிசக்தி என பல தொழில்களில் முத்திரைப்பதிக்கும் கௌதம் அதானி, ஒன்றல்ல, ஏழு நிறுவனங்களை ரூ.1 லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் உருவாக்கிய ஒரே இந்தியர் ஆவார். பத்து ஆண்டுகளாக இந்திய பணக்காரர் என்ற அடையாளத்தை வைத்திருந்த அம்பானி, இந்த ஆண்டு பட்டியலில் 7.94 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். முதல் இடத்தில் இருந்து சறுக்கிய போதிலும், அம்பானியின் சொத்துமதிப்பு கடந்த ஆண்டு 11% வளர்ச்சியடைந்தது, அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூ 210 கோடியை அவர் சம்பாதித்துள்ளார். அதானியும் அம்பானியும் சேர்ந்து, இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களின் மொத்த சொத்துக்களில் 59 சதவீதத்தை வைத்துள்ளனர்.

முகேஷ் அம்பானி - கௌதம் அதானி
முகேஷ் அம்பானி - கௌதம் அதானி

2012 ம் ஆண்டு அதானியின் சொத்து அம்பானியின் சொத்தில் ஆறில் ஒரு பங்குகூட இல்லை. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, அம்பானியை மிஞ்சி இந்தியாவின் பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார் அதானி. கடந்த ஆண்டு, அதானியின் சொத்துக்களை விட அம்பானி 1 லட்சம் கோடி ரூபாய் முன்னிலையில் இருந்தார், ஆனால் இந்த ஒரு வருடத்தில், அதானி அம்பானியைவிட 3 லட்சம் கோடி அதிகம் சொத்து வைத்துள்ளார்.

கெளதம் அதானியின் சகோதரர் வினோத் சாந்திலால் அதானி இந்தப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். அவரது சொத்துமதிப்பு 1,69,000 கோடி ரூபாயாக உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in