இந்தியாவின் இந்த ஆண்டின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் இதோ... முதல் இரு இடங்களைப் பிடித்த அம்பானி - அதானி

முகேஷ் அம்பானி - கௌதம் அதானி
முகேஷ் அம்பானி - கௌதம் அதானி

ஆண்டுதோறும் ஃபோர்ப்ஸ் வழங்கும் பணக்காரர்கள் பட்டியலில், 2024ம் ஆண்டுகான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இந்தியாவின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இரு இடங்களை முறையே முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி பிடித்துள்ளனர்.

2024-ம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸின் உலக பில்லியனர்கள் பட்டியலில், 200 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 169 என்பதாக இருந்தது. உலக பில்லியனர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் 200 இந்தியர்களின் மொத்த சொத்து மதிப்பு 954 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதுவே கடந்த ஆண்டு 675 பில்லியன் டாலராக இருந்தது. முந்தைய ஆண்டைவிட தற்போது இது 41 சதவீதம் அதிகரித்துள்ளது.

மூன்றாம் இடத்தில் ஷிவ நாடார்
மூன்றாம் இடத்தில் ஷிவ நாடார்

இந்திய பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். இவரது சொத்தின் நிகர மதிப்பு 116 பில்லியன் டாலர்கள். கடந்தாண்டு இவரது சொத்து மதிப்பு 83 பில்லியன் டாலராக இருந்தது. இந்த வகையில் 100 பில்லியன் டாலர் உலக பணக்காரர் கிளப்பில் நுழைந்த முதல் ஆசியர் என்ற பெருமையும் முகேஷ் அம்பானிக்கு சேர்ந்திருக்கிறது. இந்தியா மற்றும் ஆசியாவின் டாப் பணக்காரரான முகேஷ் அம்பானி, உலகளவில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்.

முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக அதானி குழுமத்தின் கௌதம் அதானி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 84 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இவர் உலக பணக்காரர் பட்டியலில் 17வது இடத்தில் உள்ளார். கடந்தாண்டு ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியானதில் பாதாளத்தில் சரிந்த அதானி குழுமம், மிக வேகமாக மீண்டு வருகிறது. மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக ஆட்சியமைத்தால், அதானிக்கு மேலும் யோகம் சேர்ந்து, அடுத்த பட்டியலில் அம்பானியை அதானி முந்தவும் கூடும்.

இந்த இருவருக்கும் அப்பால் இந்தியாவின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இந்தியாவின் பணக்காரப் பெண்மணியாக சாவித்ரி ஜிண்டால் உள்ளார். டாப் 10 பட்டியலில் கடந்தாண்டு 6வது இடத்தில் இருந்த சாவித்ரி ஜிண்டால், 33.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் தற்போது 4வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பமாக இருந்தவர்கள், மகன் நவீன் ஜிண்டாலுக்கு மக்களவைத் தேர்தலில் சீட் கிடைக்காத அதிருப்தியில், சாவித்ரி ஜிண்டால் உட்பட மொத்த ஜிண்டால் குடும்பமும் கடந்த வாரம் பாஜகவுக்கு தாவி இருக்கிறார்கள்.

இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால்
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால்

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 25 புதிய இந்திய கோடீஸ்வரர்கள் அறிமுகமாகியுள்ளனர். இவர்களில் நரேஷ் ட்ரெஹான், ரமேஷ் குன்ஹிகண்ணன் மற்றும் ரேணுகா ஜக்தியானி ஆகியோர் அடங்குவர். இதற்கிடையில், கடந்தாண்டு வரை பட்டியலில் இடம்பெற்றிருந்த பைஜு ரவீந்திரன் மற்றும் ரோஹிகா மிஸ்திரி ஆகியோர் சொத்து மதிப்பில் சரிந்ததில், பட்டியலில் இருந்து இம்முறை நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் 10 பணக்காரர்களின் முழுமையான பட்டியல் இதோ: 1.முகேஷ் அம்பானியின் (சொத்து மதிப்பு 116 பில்லியன் டாலர்கள்) 2.கௌதம் அதானி (84 பில்லியன் டாலர்கள்) 3. ஷிவ நாடார்(36.9 பில்லியன்) 4. சாவித்ரி ஜிண்டால் (33.5 பில்லியன்) 5.திலீப் ஷங்வி (26.7 பில்லியன்) 6.சைரஸ் பூனாவல்லா (21.3 பில்லியன்) 7.குஷால் பால் சிங் (20.9 பில்லியன்) 8.குமார் பிர்லா - (19.7 பில்லியன்) 9.ராதாகிஷன் தமானி (17.6 பில்லியன்) 10.லட்சுமி மிட்டல் (16.4 பில்லியன் டாலர்கள்)

இதையும் வாசிக்கலாமே...    

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

‘ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு... சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன!

கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!

வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in