அடேயப்பா... 4 நாட்களில் 29,000 கோடி வர்த்தகம்...களைகட்டிய ஆன்லைன் பண்டிகை கால விற்பனை!

இ-காமர்ஸ் தளங்கள்
இ-காமர்ஸ் தளங்கள்

இ-காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் நிறுவனங்களின் பண்டிகை கால சிறப்பு விற்பனை, முதல் 4 நாட்களிலேயே 29 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியிருக்கும் என ஆய்வு நிறுவனமான ரெட் சீர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகைகளை முன்னிட்டு ஆன்லைன் இ-காமர்ஸ் தளங்கள் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளன. கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி ’அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ மற்றும் ’ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்’ என்ற பெயரில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கியது.

இதேபோல் மீஷோ, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் தீபாவளி சிறப்பு சலுகையுடன் கூடிய விற்பனையை அறிவித்தனர். இந்நிலையில் ஆய்வு நிறுவனமான ’ரெட் சீட் ஸ்ட்ராட்டஜி கன்சல்டன்சிஸ்’ அறிக்கையின்படி இந்தியாவில் பண்டிகை கால விற்பனையின் முதல் 4 நாட்களில் மொத்த விற்பனைப் பொருட்களின் மதிப்பு 29 ஆயிரம் கோடி ரூபாயை கடந்து இருக்கும் என்றும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 16 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.

இ-காமர்ஸ் தளங்கள்
இ-காமர்ஸ் தளங்கள்

ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக் பொருட்களின் சராசரி விற்பனை விலையில் கொடுக்கப்பட்ட அதிரடி ஆஃபர்கள் காரணமாக, இந்த வர்த்தக உயர்வு இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் ஒரு நாள் முன்னதாகவே விற்பனை துவங்கப்பட்டதும், 10 சதவீத அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளதற்கு காரணம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனை ஒட்டுமொத்தமாக 2023-ம் ஆண்டு நடைபெற்ற வணிகத்தை விட 6 மடங்கு அதிகமாகும்.

இ-காமர்ஸ் தளங்கள்
இ-காமர்ஸ் தளங்கள்

குறிப்பாக பிரீ புக் மற்றும் ப்ரைஸ் லாக் அம்சத்தை பயன்படுத்தி ஏராளமானோர் பொருட்களை முன்பதிவு செய்ததும் நிறுவனங்களுக்கு பெரும் சாதகமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக எவ்வளவு பேர் ஆர்டர் செய்வார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிந்ததால், வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடிந்ததாகவும், வேகமான டெலிவரி மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த முடிந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in