டெபிட், கிரெடிட் கார்டுகள்: வங்கிகளுக்கு `செக்' வைத்தது ரிசர்வ் வங்கி

டெபிட், கிரெடிட் கார்டுகள்: வங்கிகளுக்கு `செக்' வைத்தது ரிசர்வ் வங்கி

சேவிங்ஸ் பேங்க், கரண்ட் அக்கவுண்ட்ஸ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே டெபிட் கார்டுகள் வழங்கப்படும். வங்கிகள் ஒரு வாடிக்கையாளரை டெபிட் கார்டு வாங்க கட்டாயப்படுத்தாது" என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வாடிக்கையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை வழங்குதல் அல்லது மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் குறிப்பிட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். புதிய விதிகளின் படி ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேல் நிகர மதிப்புள்ள வங்கிகள் இப்போது கிரெடிட் கார்டு பிசினஸை மேற்கொள்ளலாம். இத்தகைய வங்கிகள் சுயமாகவோ அல்லது பிற கார்டு வழங்கும் வங்கிகள் அல்லது என்பிஎஸ்சிக்களுடன் கூட்டாகவோ கிரெடிட் கார்டு பிசினஸை மேற்கொள்ளலாம்.

எனினும் கிரெடிட் கார்டு பிசினஸை மேற்கொள்வதற்காக தனி துணை நிறுவனங்களை அமைப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும். வங்கிகள் தங்கள் போர்டுகளின் ஒப்புதலுடன் ஒரு விரிவான டெபிட் கார்டு வழங்கல் கொள்கையை உருவாக்கி, இந்தக் கொள்கையின்படி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டுகளை வழங்கலாம். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டுகளை வழங்க விரும்பும் வங்கிகளுக்கு முன் அனுமதி தேவையில்லை.

பிராந்திய கிராமப்புற வங்கிகள் தங்கள் ஸ்பான்சர் வங்கி அல்லது பிற வங்கிகளுடன் இணைந்து கிரெடிட் கார்டுகளை வழங்க புதிய விதி அனுமதிக்கிறது. குறைந்தபட்ச நிகர மதிப்பு ரூ.100 கோடி கொண்ட என்பிஎஸ்சிக்கள் மத்திய வங்கியிடமிருந்து முன் அனுமதி பெற்ற பிறகே கிரெடிட் கார்டுகளை வழங்கலாம். ரிசர்வ் வங்கியிடம் முன் அனுமதி பெறாமல், என்பிஎப்சிக்கள் டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், சார்ஜ் கார்டுகள் அல்லது அதுபோன்ற தயாரிப்புகளை விரிச்சுவலாக அல்லது பிஸிக்களாகவோ வழங்காது.

கிரெடிட் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான குறிப்பிட்ட காரணங்களை அட்டை வழங்குநர் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

தொலைந்த கார்டுகள், கார்டு மோசடிகள் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு வாடிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்க இன்சூரன்ஸை அறிமுகப்படுத்துவது பற்றி பரிசீலிக்க கார்டு வழங்குநர்கள் பரிசீலிக்க வேண்டும்.

கார்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, கிரெடிட் கார்டு வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கும் மேலாக வாடிக்கையாளரால் ஆக்டிவேட் செய்யப்படாமல் இருந்தால், அதை ஆக்டிவேட் செய்ய கார்டு பெற்றவரிடமிருந்து OTP அடிப்படையிலான ஒப்புதலை கார்டு வழங்குநர்கள் பெற வேண்டும். சேவிங்ஸ் பேங்க், கரண்ட் அக்கவுண்ட்ஸ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே டெபிட் கார்டுகள் வழங்கப்படும். வங்கிகள் ஒரு வாடிக்கையாளரை டெபிட் கார்டு வாங்க கட்டாயப்படுத்தாது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்" என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.