இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையே போர் எதிரொலி - கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு

கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு
கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு

இஸ்ரேல் - ஹமாஸ் படையினர் இடையேயான போர் காரணமாக கச்சா எண்ணெயின் விலை சுமார் 5 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதால், பெட்ரோலிய பொருட்களின் விலையும் கடுமையாக உயரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் போர் அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் அந்நாட்டின் ராணுவத்தினர் பாலஸ்தீனம் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேலின் போர் அறிவிப்பு காரணமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச அரங்கில் திடீரென உயர துவங்கியுள்ளது. இன்று சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 87.61 அமெரிக்க டாலர்கள் விலைக்கு வர்த்தகமாகி வருகிறது. இது கடந்த வார இறுதி விலையைக் காட்டிலும் சுமார் 5 சதவீதம் அதிகமாகும்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இந்த விவகாரத்தை இந்தியா மிகுந்த கவனத்துடன் எதிர்கொள்ளும். போர் நடைபெறும் இடம் சர்வதேச எரிசக்தி துறையின் மையமாக இருப்பதால் பிரச்சினையை கவனத்துடன் கையாண்டு இதிலிருந்து வெளியேற முயற்சிப்போம். இதுபோன்ற பிரச்சினைகள் வரும் போது தான் மக்கள் மரபுசாரா எரிசக்தியை நோக்கி மாறுவதற்கான வாய்ப்பு உருவாகும்” என தெரிவித்துள்ளார்.

மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

தற்போதைய நிலையில் 5% விலை உயர்வு காணப்பட்டாலும் அடுத்தடுத்த நாட்களில் மத்திய கிழக்கு நாடுகள் இந்த போரில் என்ன நிலைப்பாட்டை எடுக்கின்றன என்பதை பொறுத்து கச்சா எண்ணெய் விலை மேலும் உயருமா என்பது தெரியவரும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in