தங்கத்தின் விலை குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சிறிய அளவில் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 4700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 37,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 5,127 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.61.50க்கு விற்பனையாகிறது. அதே நிலையில் வெள்ளியின் விலையானது கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து 61,500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த வாரம் முழுவதும் குறைந்து வந்த தங்கத்தின் விலை, சில நாட்களாக சிறிய அளவில் உயர்ந்தது. இந்த சூழலில் மீண்டும் இன்று தங்கத்தின் விலையில் சிறிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in