தங்கத்தின் விலை குறைந்தது - வெள்ளியின் விலையிலும் சரிவு: இன்றைய நிலவரம்

தங்கத்தின் விலை குறைந்தது - வெள்ளியின் விலையிலும் சரிவு: இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றும் குறைந்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 4,730 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 37,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளியில் விலையும் இன்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 1000 ரூபாய் குறைந்து 63 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 65 ரூபாய் குறைந்து 4,740 ரூபாய்க்கு விற்பனையானது. அதற்கு முதல்நாள் கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 4,805 ரூபாய்க்கு விற்பனையானது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in