தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதமாக தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 அதிகரித்து சவரனுக்கு ரூ.42,360 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.10 அதிகரித்து கிராமுக்கு ரூ. 5,295 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 46,120 ஆகவும் கிராமுக்கு ரூ.5,765 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ. 73.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.73,500 க்கு விற்பனையாகிறது.