ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து 5,023 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்து 40,128 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து 71.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 300 ரூபாய் உயர்ந்து 71,300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.