ஆன்லைன் விளையாட்டு போர்வையில் சூடு பிடிக்கும் ஹவாலா பரிமாற்றம்... ஏஐ உதவியுடன் மோப்பமிடும் அரசு!

ஏஐ உதவி
ஏஐ உதவி

ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்ட தளங்களின் வாயிலாக ஹவாலா பணப்பரிமாற்றம் அதிகரித்ததை தொடர்ந்து, அவற்றை மோப்பமிட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நுட்பங்களை மத்திய அரசு நாட உள்ளது.

டிஜிட்டல் யுகத்தில் வரங்களுக்கு இணையாக சாபங்களும் ஆன்லைனில் சூழ்ந்திருக்கின்றன. அதிலும் வெளிநாடுகளில் இருந்து இணையத்தில் நீளும் மாயக்கரங்களால், இந்தியாவில் நிழலான காரியங்களுக்கான நிதி ஆதாரங்கள் வெகுவாய் அதிகரித்து வருகின்றன. மத்திய அரசுக்கும் அதன் விசாரணை அமைப்புகளுக்கும் தலைவலியாகும் இவற்றைக் கண்டறிந்து களையெடுக்க, ஏஐ நுட்பங்களின் உதவியை நாட முடிவு எட்டப்பட்டுள்ளது.

யுபிஐ பரிவர்த்தனை
யுபிஐ பரிவர்த்தனை

ஆன்லைனில் விளையாட்டு - சூதாட்டம் இரண்டுக்கும் இடையே மிக மெல்லிய கோடு மட்டுமே உள்ளது. இதனால் விளையாடின் பெயரில் சூதாட்ட செயலிகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. அவை சாமானியர்களிடமிருந்து வழிப்பறிக்கு நிகரான மோசடிகளை நிகழ்த்துவதோடு, வெளிநாடுகளில் இருந்து பணப்பரிமாற்றம் மூலமாக கொழித்து வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் பிராக்ஸி வங்கிக் கணக்குகளுக்கு பெரும்தொகைகள் கொட்டுகின்றன. ஹவாலா உபாயம் மூலமாகவும், கிரிப்டோ பரிமாற்றம் வாயிலாகவும் இந்த வங்கிக் கணக்குகளில் பணம் சேருகின்றன. இத்துடன் டிஜிட்டல் இந்தியாவின் வரவேற்புக்குரிய யுபிஐ பரிவர்த்தனை வாயிலாக, இந்த பெருந்தொகை உரியவர்களிடம் சென்று சேர்ந்துவிடுகிறது.

ஆன்லைன் விளையாட்டு/சூதாட்ட செயலி
ஆன்லைன் விளையாட்டு/சூதாட்ட செயலி

அரசு புதிய தலைவலியாகி இருக்கும் இந்த மோசடியை முடிவுக்கு கொண்டுவர, யுபிஐ பரிவர்த்தனைக்கான விதிகளை இறுக்கியது. ஆனபோதும் ஆன்லைனில் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனைகளையும் ஊடுருவி ஆராய்வது, பெரும் மனித உழைப்பு மற்றும் நேரத்தை கோருகின்றன. அப்படி போராடி சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகளை அடையாளம் காணும்போது, அவை தங்களது அனைத்து ஆன்லைன் தடயங்களையும் அழித்துவிடுகின்றன. எனவே ஏஐ நுட்பத்தின் உதவியோடு, சுடச்சுட நிதி பரிவர்த்தனை மோசடிகளை மோப்பமிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in