
ரகசிய அல்காரிதம் மூலம் தனது பொருட்களின் விலையை ஏற்றி சுமார் 100 கோடி அமெரிக்க டாலருக்கும் மேலாக மோசடி செய்ததாக அமேசான் மின் வர்த்தக நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது.
உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்று அமேசான். சந்தையில் முன்னணி வகித்தபோதும் அமேசான் போன்ற ஏகபோக ஆன்லைன் நிறுவனங்கள், அளவில் சிறிய போட்டி நிறுவனங்களை நசுக்கவே முயல்வதாக குற்றச்சாட்டு உண்டு. இந்த வகையில் போட்டி நிறுவனங்களின் விலையை முறியடிக்கும் நோக்கில் ரகசிய அல்காரிதத்தை பயன்படுத்தியதாக அமேசான் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது.
நெஸ்ஸி என்ற பெயரிலான இந்த அல்காரிதம், போட்டி நிறுவனங்களின் விலை நிர்ணயத்தை கண்காணித்து, அமேசான் பொருட்களின் விலையை உயர்த்த உதவின. இதன் மூலம் அமேசான் வாடிக்கையாளர்கள் பொருட்களின் விலை உயர்ந்த காலத்தில் அவற்றை வாங்க நேரிட்டது. நெஸ்ஸி பயன்பாடு குறித்து அமேசான் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
மாறாக, நெஸ்ஸி மூலம் தங்கள் வாடிக்கையாளர்கள் விலை குறைந்த பொருட்களையே வாங்க முடிந்தது என்று அமேசான் வாதிடுகிறது. ஆனால் இந்த விவகாரத்தை ஆராயும் அமெரிக்காவின் பெடரல் டிரேட் கமிஷன், அமேசான் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு ஆதாரம் கிடைத்திருப்பதாக கூறுகிறது. நெஸ்ஸி மூலம் சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அமேசான் ஆதாயமடைந்திருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. ஆனபோதும் நீதிமன்ற விசாரணைகள் மட்டுமே இவற்றை முடிவு செய்யும்.
இதையும் வாசிக்கலாமே...
தீபாவளி போனஸ்... ஊழியர்களுக்கு கார்களை பரிசாக தந்த நிறுவன உரிமையாளர்!
நாளை கடைசி தேதி : ரூ.62,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
சென்னையில் பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வீட்டை முற்றுகையிட்ட வியாபாரிகள்!
9வகுப்பறையில் சுருண்டு விழுந்த 9-ம் வகுப்பு மாணவி... மாரடைப்பால் பலியான சோகம்!