60 லட்சம் பேர் விண்ணப்பம்: பங்கு விற்பனையில் சாதனை படைத்தது எல்ஐசி

60 லட்சம் பேர் விண்ணப்பம்: பங்கு விற்பனையில் சாதனை படைத்தது எல்ஐசி

எல்.ஐ.சி. பொதுப்பங்கு விற்பனையில் பங்குகளை வாங்க சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்று 21 ஆயிரம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது. ஊழியர்களுக்கு ஒரு பங்குக்கு 45 ரூபாய் தள்ளுபடியும், பாலிசிதாரர்களுக்கு 60 ரூபாய் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்கு விற்பனை கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இன்று மாலை 4 மணியுடன் பங்கு விற்பனை முடிவடைந்துள்ளது. இந்நிலையில், நேற்று வரை சில்லறை முதலீட்டாளர்கள் 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

எல்.ஐ.சி. பங்குகளுக்கு சில்லறை விற்பனை பிரிவில் 1.53 மடங்கும், ஊழியர்கள் பிரிவில் 3.7 மடங்கும் அதிகமாக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய புதிய பங்கு வெளியீடு என்ற பெருமையை எல்.ஐ.சி பெற்றுள்ள நிலையில், தற்போது அதிக விண்ணப்பங்களிலும் சாதனை படைத்துள்ளது.

Related Stories

No stories found.