கிராமுக்கு 54 ரூபாய் சரிவு: தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை!

கிராமுக்கு 54 ரூபாய் சரிவு: தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 54 ரூபாய் குறைந்துள்ளது. தொடர்ந்து தங்கத்தின் விலை சரிந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37 ஆயிரத்து 440 க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு 54 ரூபாய் குறைந்து ரூ.4,626க்கு விற்பனையாகிறது. அதேபோல தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.432 குறைந்து.ரூ.37,008க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு 59 ரூபாய் குறைந்து 5,046 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து ரூ.61 ஆயிரத்து 600 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.61.60 ஆக உள்ளது.

பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதால் மக்கள் தங்கம் வாங்க ஆர்வத்துடன் உள்ளனர். இந்த சூழலில் தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களில் சவரனுக்கு 952 ரூபாய் குறைந்துள்ளது. தங்கத்தின் விலை குறைந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in