ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கான கடைசி நாள் நாளையுடன் முடிவடையும் நிலையில், இதுவரை 87 சதவீத நோட்டுகள் திரும்பி வந்துள்ளன என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். இன்னும் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுதும் புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, 2016 நவம்பரில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பணப்புழக்கத்தை சமாளிக்கும் வகையில், புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக, கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.
செப்டம்பர் 30-ம் தேதி வரை அந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்தலாம் என்றும், அதுவரை இந்த நோட்டுகள் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளவும், வங்கிக் கணக்கில் செலுத்தவும் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம் அக்டோபர், 7ம் தேதி வரை அதை நீட்டித்து, ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது: புழக்கத்தில் இருந்த ரூ.3.43 லட்சம் கோடியில், 87 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துவிட்டது. இன்னும் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பவில்லை என்று கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு
டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்
விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!