தங்கம் மற்றும் வெள்ளியின் விலை: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலையானது கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,100 ரூபாயைத் தொட்டு அதிர்ச்சியளித்தது. இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 5,060 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்து 40,480 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1.80 ரூபாய் குறைந்து ரூ.72.20க்கு விற்பனையாகிறது. அதுபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,800 ரூபாய் குறைந்து 72,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in