இன்று வைரமுத்து - வாசகர் சந்திப்பு!

இன்று வைரமுத்து - வாசகர் சந்திப்பு!

சென்னை புத்தகக் காட்சி விழாவில் இன்று வாசகர்களை சந்தித்து கவிஞர் வைரமுத்து அளவளாவ உள்ளார்.

கவிஞர் வைரமுத்து இலக்கியத்தின் பொன்விழா ஆண்டினை அவரது வாசகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி ஆண்டு முழுக்க பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக, நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் வாசகர்களை வைரமுத்து சந்திக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், பிப்.16 தொடங்கி மார்ச் 6 வரையிலான சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு அவ்வப்போது படைப்பாளர்கள் - வாசகர்கள் இடையிலான சந்திப்பும் அங்கே நிகழ்ந்து வருகின்றன. அந்த வரிசையில் வைரமுத்து - வாசகர் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று(பிப்.27) மாலை 4 மணியளவில் புத்தகக் கண்காட்சியின் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பொருநை ஆற்றங்கரை கண்காட்சி அரங்கின் அருகே அமைக்கப்பட்ட தனி மேடையில், வாசகர்கள் வாங்கிய புத்தகங்களில் வைரமுத்து கையெழுத்து இடுகிறார். தொடர்ந்து புத்தகக் காட்சியின் வாசகர்களை திறந்தவெளியில் சந்தித்து உரையாடுகிறார்.

இந்த நிகழ்ச்சியை https://www.youtube.com/watch?v=XSBnHuJVdls என்ற இணைப்பில் யூடியூப் வாயிலாக நேரலையிலும் ஒளிபரப்ப உள்ளனர்.

Related Stories

No stories found.