‘போரை வெறுக்கிறேன்’ -கவிஞர் வைரமுத்து

‘போரை வெறுக்கிறேன்’ -கவிஞர் வைரமுத்து

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை முன்வைத்து, கவிஞர் வைரமுத்து தனது உணர்வை கவிதையாக பதிவு செய்திருக்கிறார்.

உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் உக்ரைன் மீதான போர் குறித்து பலரும் சமூக ஊடகங்களில் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். யுத்தம் எங்கே நடந்தாலும், தொடர்புடைய நாடுகள் மட்டுமன்றி உலகத்தின் சகல மூலைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதே பெரும்பான்மையானோரின் கருத்தாக இருக்கிறது.

இந்த வகையில் கவிஞர் வைரமுத்து இன்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் வரிகள்:

நான்

போரை வெறுக்கிறேன்

அது உலகத்தின்

விலா எலும்புகளையும் பாதிக்கும்

கீவ் நகரத்தில் விழுந்த குண்டு

கீரிப்பட்டியின்

கீரைக்காரி கூடை உடைக்கும்

ரஷ்யா

போரை நிறுத்திவிட

வேண்டும்

ரஷ்யா மீது

ஜி7 நாடுகளின்

பொருளாதாரத் தடைகள்

நீக்கப்பட வேண்டும்

நான்

போரை வெறுக்கிறேன்

இதே பொருளில் ஆங்கிலத்திலும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

Related Stories

No stories found.