கண்ணீர் வடிக்கும் பொம்மைகள்...

அட்டாலி, புழக்கடை, சமையலறைகளில் கிடக்கும் அவலம்
அட்டாலியில் பொம்மைகள்
அட்டாலியில் பொம்மைகள்படங்கள்: கேயெஸ்வி

கரோனாவால் மனிதர்கள்தான் துன்பப்பட வேண்டும், உயிரில்லாத பொம்மைகள் கூடவா? கோவை கவுண்டர் மில்ஸ் அருகே வசிக்கும் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வீட்டின் ஒண்டிக்குடித்தனத்துக்குள் நுழையும், ‘உன்னைக்கண்டு நான் வாட, என்னைக்கண்டு நீ வாட கண்ணீரும் கதையாக கடலானதே; உலகெங்கும் பரவும் உயிர்கொல்லி நோயால் வாழ்வாதாரம் போனதடா.. நம் வாழ்வாதாரம் போனதடா!’ என்று சோக கீதம் ஒலிக்கிறது. அதை ஒரு கூண்டுக்குள் பாடி, ஆடி நம்மை ஈர்ப்பது 3 பொம்மைகள். ஒன்று மூக்கு வாயை மறைத்து முகக் கவசம் போட்டிருக்கிறது. இரண்டு பொம்மைகள் பாடலுக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருக்கின்றன. அவற்றை அப்படி ஆடவைத்துக் கொண்டிருந்தவர் ஓய்வுபெற்ற தமிழாசிரியரும், ஊரெங்கும் ஆயிரக்கணக்கான இடங்களில் பொம்மலாட்டம் நடத்தியவருமான சீனிவாசன்.

பள்ளி, மாணவர்களுக்கு பொம்மலாட்டக் கலை மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும், அரசு நிகழ்ச்சிகளுக்காக எய்ட்ஸ், குடும்பக்கட்டுப்பாடு, டெங்கு, சிக்குன்குனியா, நூலகப் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஊருக்கு ஊர் செய்து வந்தவர், கரோனா தொடர் முடக்கத்தால் ஒன்றரை வருடங்களாக நிகழ்ச்சிகளே நடத்தாமல் முடங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கிறார்.

கடந்த 2019 மார்ச் தொடங்கி இப்போதுவரை மூன்றே மூன்று நிகழ்ச்சிகள் நடத்தியிருந்தால் பெரிய விஷயம்!’ என்று சொல்லும் இவர், மூலைமுடுக்குகளில், அட்டாலியில், கட்டிலுக்குகீழே கிடக்கும் பொம்மைகள் (நூற்றுக்கணக்கில் பொம்மைகள் செய்து வைத்திருக்கிறார்) செல்லரித்து, குப்பை மண்டிப் போய் விடக்கூடாது என்பதற்காகவும், இந்தக் கலையை தான் நடத்தாமலே இருந்தால் தனக்கு பொம்மலாட்டம் ஆட்டுவது கை வராமல் போய் விடக்கூடாது என்பதற்காகவே அவ்வப்போது பொம்மைகளை எடுத்து வீட்டில், பொம்மைக்கான குட்டி அரங்கை செட் அப் செய்து ’பிராக்டிஸ்’ செய்கிறார்.

இதற்கு மாற்றாக ஏதாவது அரசு சார்பில் செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைனில் பொம்மலாட்டம் நடத்திடவும் ஏற்பாடு செய்து அழிந்து வரும் இந்தக்கலையை காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்.

அவர் கோரிக்கையை பொம்மைகளும் கதை சொல்லுவது போல இங்கே, அது குறித்த புகைப்படங்கள்:

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in