900 மிலி தங்கத்தில் கரோனா விழிப்புணர்வு!

கைவினையால் கவனம் ஈர்க்கும் நகைத்தொழிலாளி
பாலமுருகன்
பாலமுருகன்

குமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயன் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் ஒரு கிராமிற்கும் குறைவான தங்கத்தில் மாஸ்க், தடுப்பூசி, தடுப்பு மருந்து் , கரோனா வைரஸ் தோற்றம் ஆகியவற்றை செய்து கரோனாவுக்கு விழிப்புணர்வு செய்து வருகிறார்.

900 மில்லி கிராமில் கரோனா விழிப்புணர்வு ...
900 மில்லி கிராமில் கரோனா விழிப்புணர்வு ...

இதுகுறித்து காமதேனு இணையத்திடம் பேசிய பாலமுருகன், “நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் நகைப்பட்டறை வைத்து தொழில் செய்துவருகிறேன். தொழில் ஒருபக்கம் இருந்தாலும் எனக்குள் சமூக அக்கறையும் அதிகம். இதற்கு முன்பு, டெங்கு கொசு, ஹெல்மெட் விழிப்புணர்வு, தூய்மை இந்தியா திட்டம் என அரசின் திட்டத்தின் மாதிரிகளை குறைந்த எடை கொண்ட தங்கத்தில் செய்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஊட்டினேன். உலகக் கோப்பை கிரிக்கெட், ஜல்லிக்கட்டு போரட்டம் உள்ளிட்ட சமயங்களும் அவற்றை மிகக் குறைந்த எடையிலான தங்கத்தில் செய்து காட்சிக்கு வைத்தேன்.

இப்போது கரோனா காலம். அரசு கரோனாவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள எடுத்து வருகிறது. புதிதாக ஒமைக்ரான் வைரஸும் நம்மை அச்சுறுத்துகிறது. இப்படியான சூழலில் அரசின் கரோனா ஒழிப்புப்பணிக்கு என்னால் முடிந்த ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் எனத் தோன்றியது. அப்பரி முடிவெடுத்துச் செய்தது தான் இந்தப் பொருட்கள்.

கரோனா விழிப்புணர்வுக்காக கவனம் ஈர்க்கும் விதமாக இந்தப் பொருட்களை ஒரு கிராமுக்கும் குறைவான தங்கத்திலேயே செய்ய முடிவு செய்தேன். மொத்தமே 900 மில்லியில் கரோனா வைரஸ் தோற்றம், தடுப்பூசி, தடுப்பு மருந்து, மாஸ்க் அனைத்தும் செய்துவிட்டேன். இதைச் செய்து முடிக்க முழுதாக இரண்டு நாட்கள் ஆனது. இந்தப் பொருட்களை எனது சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in