தொல்லியல் பார்வை

கதக் திரிகூடேசுவரர் கோயில்
தொல்லியல் பார்வை
RAMESH M

கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளி - தார்வாட் இரட்டை நகரங்களில் இருந்து, 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கதக் நகரம். இங்கு தான் இந்த திரிகூடேசுவரர் கோயில் அமைந்துள்ளது.

சாளுக்கிய மன்னர்களின் கட்டிடக் கலைக்கு அழியாச் சான்றாய் நிற்கும் இந்தக் கோயில், கல்யாணிச் சாளுக்கியர் காலத்தில் கட்டப்பட்டது. கிபி 11 மற்றும் 12-ம் நூற்றாண்டுகளில் கற்களால் செதுக்கிக் கட்டிமுடிக்கப்பட்ட இந்தக் கோயிலில், சிவனுக்கும் (திரிகூடேசுவரர்) சரஸ்வதிக்கும் தனித் தனி சந்நிதிகள் இருக்கின்றன.

சிவன் கோயில் இன்னமும் வழிபாட்டில் இருக்கிறது; சரஸ்வதி கோயிலில் வழிபாடு இல்லை என்றாலும், இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ஒரே கல்லில் 3 லிங்கங்கள் இருப்பதும் அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட தூண்கள் இருப்பதும் இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு. இக் கோயிலின் திருப்பணியை சாளுக்கியர்களுக்குப் பிறகு, ராஷ்டிரகூடர்களும் தொடர்ந்து மேற்கொண்டதாக வரலாற்றுத் தரவுகள் சொல்கின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in