தொல்லியல் பார்வை

நார்த்தாமலை விஜயாலய சோளீஸ்வரர் கோயில்
விஜயாலய சோளீஸ்வரர் கோயில்...
விஜயாலய சோளீஸ்வரர் கோயில்...RAMESH M

புதுக்கோட்டை நார்த்தாமலை என்றதும் அனைவருக்கும் அங்குள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோயில்தான் நினைவுக்கு வரும். சுத்துப்பட்டில் இருக்கும் பலநூறு கிராமங்களின் வழிபாட்டு தெய்வமாக இருக்கிறது இந்த மாரியம்மன் கோயில். அம்மனை தரிசித்துவிட்டு மலை மீது நடந்தால், அங்கே கோயில் கொண்டிருக்கும் விஜயாலய சோளீஸ்வரரையும் தரிசித்து வரலாம். 1,300 ஆண்டுகளுக்கு முன்பு முத்தரையர்களால் கலைநயத்துடன் கட்டியெழுப்பப்பட்ட இந்தக் கோயில், சோழர்கள் காலத்தில் புனரமைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இந்தக் கோயில்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in