விசாகம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் கவலைகள் நீங்கும்; வீண் அலைச்சல்; பண வரவில் தாமதம்; குடும்பத்தில் மகிழ்ச்சி!

விசாகம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் கவலைகள் நீங்கும்; வீண் அலைச்சல்; பண வரவில் தாமதம்; குடும்பத்தில் மகிழ்ச்சி!

விசாகம் நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் நீங்கும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம். ராசியை சனி பார்ப்பதால் வெளியூர்ப் பயணம் மூலம் அலைச்சல் உண்டாகலாம்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்குப் பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாகக் கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ மற்றும் ஆயுதங்களைக் கையாளும்போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது யோசித்துச் செய்வது நல்லது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.

கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சாதுர்யமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரியத் தடைகள் நீங்கும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

அரசியல் துறையினருக்கு வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. வழக்கத்தை விட செலவுகள் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை பாடங்களைப் படிப்பது நல்லது.

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in