அவிட்டம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் சொத்துகள் சேரும்; வேலையில் பதவி உயர்வு; அம்பாள் வழிபாடு!

அவிட்டம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் சொத்துகள் சேரும்; வேலையில் பதவி உயர்வு; அம்பாள் வழிபாடு!

அவிட்டம் நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் நல்ல பொருளாதார வளமும் மேன்மையும் உண்டாகும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். நீண்ட நாட்களாக காத்திருந்தவர்களுக்கு நல்ல இனிப்பான செய்தி காத்திருக்கிறது.

குடும்பத்தில் வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். உறவினர்களுக்கு விருந்து, விழாக்களுக்காகச் செலவு செய்வீர்கள். புதிய சொத்துகள் வாங்கலாம். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். மனைவி வழியே இருந்து வந்த கருத்துவேறுபாடு அடியோடு ஒழியும்.

தொழிலதிபர்கள் தொழில் நிமித்தமாக வெளியூர் செல்ல நேரிடலாம். சிலர் தூர தேசப் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னதமான நிலையை அடையலாம். பிள்ளைகளால் பெருமை அடையலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு முதலானவை இருக்கும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பெண்களுக்கு வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும். உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் ஏற்படும்.

கலைத்துறையினர் தங்கு தடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். பலர் மதிக்கத்தக்க வகையில் அந்தஸ்து உயரும். முற்போக்கான விஷயங்களில் மனம் செல்லும்.

அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் வந்து சேரும். நற்பெயர் எடுப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைத்தே தீரும். ஆனால் யாரிடமும் பழகும்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்கள். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். மனதில் இருந்து வந்த பயம் போவதற்கு தகுந்த பெரியோர்களிடம் ஆலோசனையும், பயிற்சிகளையும் கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாளைத் தரிசித்து வாருங்கள். வெள்ளைநிற பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்யவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in