சனிப்பெயர்ச்சி: சதயம் அன்பர்களே! மனதில் பயம், கவலை; லாபம் தாமதம்; வெற்றி உண்டு!

சனிப்பெயர்ச்சி: சதயம் அன்பர்களே! மனதில் பயம், கவலை; லாபம் தாமதம்; வெற்றி உண்டு!

இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!

உங்கள் எல்லோருக்கும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

சதயம்:

சனி பகவான் உங்களின் இருபத்தி ஏழாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சனி - ராகு ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை எப்போதும் மேலோங்கும்.

இந்த சனிப்பெயர்ச்சியில் துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்துப் பேசுவது நல்லது. ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம்.

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது அவசியம்.

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. நிதானமாகக் கையாள்வதன் மூலம் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக்கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: வாராஹி தேவியை வணங்கி வாருங்கள். காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். இந்த சனிப்பெயர்ச்சியால் உடல்நலத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்

68% நற்பலன்கள் கிடைக்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in