சனிப்பெயர்ச்சி: திருவோணம் அன்பர்களே! மனக்கவலை தீரும்; பாராட்டு கிடைக்காத நிலை; புதிய வாய்ப்புகள்; கூடுதல் உழைப்பு!

சனிப்பெயர்ச்சி: திருவோணம் அன்பர்களே! மனக்கவலை தீரும்; பாராட்டு கிடைக்காத நிலை; புதிய வாய்ப்புகள்; கூடுதல் உழைப்பு!

இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!

உங்கள் எல்லோருக்கும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

திருவோணம்:

சனி பகவான் உங்களின் இரண்டாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

சனி - சந்திரன் கூட்டணியில் பிறந்த நீங்கள் கவர்ச்சிகரமாக இருப்பீர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தைத் தரலாம் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்த பின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும்.

கலைத்துறையினர் தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டியது அவசியம்.

அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் வெற்றியை அடைய முடியும்.

பெண்கள் உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.

மாணவர்கள் எவ்வளவு திறமையாகப் படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியைத் தரும்.

பரிகாரம்: திருப்பதி பெருமாளை வழிபாடு செய்வதால் மனக்குழப்பம் அகலும். குடும்பப் பிரச்சினைகள் தீரும். இந்த சனிப்பெயர்ச்சியில், சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும்.

72% நற்பலன்கள் கிடைக்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in