சனிப்பெயர்ச்சி: கேட்டை அன்பர்களே! நல்லபேர் கிடைக்கும்; வேலையில் முன்னேற்றம்; திறமை வெளிப்படும்!

சனிப்பெயர்ச்சி: கேட்டை அன்பர்களே! நல்லபேர் கிடைக்கும்; வேலையில் முன்னேற்றம்; திறமை வெளிப்படும்!

இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!

உங்கள் எல்லோருக்கும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

கேட்டை:

சனி பகவான் உங்களின் ஆறாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

செவ்வாய் - புதன் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மனக்கணக்கு போடுவதில் வல்லவர்.

இந்த சனிப்பெயர்ச்சியில் உல்லாசப் பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களைச் சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளைத் திறமையாகச் செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள்.

கலைத்துறையினர் திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளியுங்கள்.

பெண்கள் பயணங்கள் செல்ல நேரிடும். எந்தப் பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வரவும். மனக்கவலைகள் நீங்கும். தடைகள் அனைத்தும் அகலும்.

69% நற்பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in