
இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!
உங்கள் எல்லோருக்கும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.
சனிப்பெயர்ச்சி:
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:
தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை
வாக்கியப் பஞ்சாங்கப்படி:
பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை
சித்திரை:
சனி பகவான் உங்களின் பத்தாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.
செவ்வாய் அம்சத்தில் பிறந்துள்ள நீங்கள் தைரியமானவர்கள்.
இந்த சனிப்பெயர்ச்சியில் பணவரவு இருக்கும். மனக்கவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள்.
குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும்.
கலைத்துறையினர் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.
பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதுர்யமான பேச்சின் மூலம் பிரச்சினைகள் தீரும். பணவரவு திருப்தி தரும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
பரிகாரம்: காவல்தெய்வத்தை வழிபடுவதால் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். இந்த சனிப்பெயர்ச்சியில், உங்களுக்கு இதுவரை இருந்த நோய்கள் நீங்கி, உடல்நலம் சீராகும்.
71% நற்பலன்கள் ஏற்படும்.