”தனியார் நிறுவன விளம்பரத்துக்கா காவல் நிலைய பலகை?”

டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி
”தனியார் நிறுவன விளம்பரத்துக்கா காவல் நிலைய பலகை?”

‘காவல் நிலைய பெயர்ப் பலகையில் இடம் பெற்றுள்ள விளம்பரதாரர் பெயர்களை உடனடியாக அகற்ற வேண்டும்’ என தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. அதில் சில காவல் நிலையங்களில் தனியார் நிறுவனங்கள் தானாக முன் வந்து நன்கொடை என்ற பெயரில் பெயர்ப் பலகை வைக்கின்றனர்.

அவ்வாறு காவல் நிலையங்களில் வைக்கப்படும் பெயர்ப் பலகைகளில், அந்த தனியார் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, அனைத்து காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,

“சில காவல் நிலைய பெயர்ப் பலகைகளில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றுள்ளதால் மக்கள் மத்தியில் தவறான புரிதல் ஏற்படுகிறது. எனவே தனியார் நிறுவன பெயர்கள் பொறிக்கப்பட்ட காவல் நிலைய பெயர்ப் பலகைகளை உடனடியாக அகற்றி, புதிய பெயர்ப் பலகையை வைக்க வேண்டும். மேலும் காவல் நிலைய பெயர்ப் பலகையை வைக்கக் காவல் நிலைய முன்பணத்தைச் செலவிட்டுக் கொள்ளலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.