புதிய ஆளுநரை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு!

பன்வாரிலால் புரோகித்துக்கும் வாழ்த்து
புதிய ஆளுநரை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு!
ஆர்.என்.ரவி

தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்கும் ஆர்.என்.ரவியை வாழ்த்தி வரவேற்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது வருகை தமிழகத்தின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் ஊட்டம் சேர்க்கட்டும் என்று ட்விட் செய்துள்ளார்.

நாகாலாந்தின் ஆளுநரான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.என்.ரவியைத் தமிழகத்தின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ரவியின் வருகையை வரவேற்று ட்விட் செய்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘அவரது வருகை தமிழகத்தின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் ஊட்டம் சேர்ப்பதாக அமையட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுவரை பஞ்சாப் மாநில பொறுப்பையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில முழுநேர ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்தும் ட்விட் செய்திருக்கும் ஸ்டாலின், ‘எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் முதல்வர் பொறுப்புக்கு வந்தபிறகும் என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்பு காட்டிய பன்வாரிலால் புரோகித்தை வாழ்த்தி வழியனுப்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.