ரூ.34 லட்சம், 4.9 கிலோ தங்கம், 9 சொகுசுக் கார்கள்... கே.சி.வீரமணியின் இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டவற்றின் பட்டியல்!

ரூ.34 லட்சம், 4.9 கிலோ தங்கம், 9 சொகுசுக் கார்கள்...
கே.சி.வீரமணியின் இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டவற்றின் பட்டியல்!
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் இன்று (செப்.16) வீரமணிக்குத் தொடர்புடைய இடங்கள், அவரது பங்குதாரர்களின் நிறுவனங்கள், முன்னாள் அரசியல் நேர்முக உதவியாளரின் அலுவலகம் என சென்னையில் 6, பெங்களூருவில் 2 இடங்கள் உட்பட மொத்தம் 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 34,01,060 ரொக்கம், 1.80 லட்சம் அந்நிய செலாவணி டாலர், 9 சொகுசு கார்கள், 4.987 கிலோ தங்கம், 7.2 கிலோ வெள்ளிப் பொருட்கள், 5 கணினிகள், ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதற்கான முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கே.சி. வீரமணியின் வீட்டு வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான சுமார் 275 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, அதற்கான விசாரணையும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் கே.சி வீரமணியிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.