பொதுத் துறையை தனியாருக்கு விற்பதா?

கோவையில் மண் சட்டி ஏந்தி போராட்டம்
பொதுத் துறையை 
தனியாருக்கு விற்பதா?
மண் சட்டி ஏந்தி...

பொதுத் துறை நிறுவனங்களின் சொத்தை விற்கும் மத்திய அரசைக் கண்டித்து, கோவையில் கையில் மண் சட்டி ஏந்தி நூதன போராட்டம் நடத்தினர் திராவிடர் தமிழர் இயக்கத்தினர்.

இன்று (3/9/21) மதியம் 12 மணிக்கு, ஊர்வலமாக கோவை ஆட்சியர் அலுவலகம் வந்த 50-க்கும் மேற்பட்ட இந்த அமைப்பினர் நெற்றியில் வெள்ளைப் பெயின்ட்டில் நாமமிட்டும், அதே நாமத்தை மண் சட்டிகளுக்கும் இட்டிருந்தனர். கூடவே, மாவட்ட ஆட்சியர் மூலம் குடியரசுத் தலைவருக்கு மனு ஒன்றையும் எழுதியிருந்தனர்.

அதில், ‘பொதுச் சொத்துகளை ஒன்றிய அரசு விற்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், அதை விற்பது நம் தேசத்தின் பொருளாதாரத்திற்கே சிக்கலை உருவாக்கும். எனவே அவற்றை விற்கக்கூடாது!’ என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த அமைப்பினருக்கு தலைமையேற்று வந்த குப்புராஜ் கூறும்போது, ”பொதுச்சொத்துகளை மத்திய அரசு இப்படியே தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டிருந்தால், மக்கள் எல்லாம் இப்படித்தான் திருவோடு ஏந்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விடும் என்பதை உணர்த்தத்தான், இந்த நாமத்தை சட்டியிலும் எங்கள் நெற்றியிலும் இட்டிருக்கிறோம். தவிர எந்த சமயத்தைச் சேர்ந்தவர்களையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல!” என்றார்.

இவர்கள் ஊர்வலமாக வந்ததால், ஒரு மணிநேரத்துக்கும் மேலாக கோவை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பரபரப்பு நிலவியது. போலீஸார் இவர்கள் நாமமிட்டு திருவோடு ஏந்தி உள்ளே செல்வதைத் தடுத்தனர். அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அமைப்பினர், கடைசியில் மண் சட்டிகளை ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே ஓர் ஓரமாய் வைத்துவிட்டு, தம் நெற்றி நாமத்தையும் அழித்தபிறகே, ஆட்சியரிடம் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.