அரக்கோணம் சிமென்ட் ஆலையில் தீ விபத்து: 6 ஊழியர்கள் படுகாயம்

அரக்கோணம் சிமென்ட் ஆலையில் தீ விபத்து: 6 ஊழியர்கள் படுகாயம்
'தி இந்து' கோப்புப் படம்

அரக்கோணம் அருகே, சிமென்ட் ஓடு தயாரிக்கும் ஆலையில் திடீரென கொதிகலன் திறந்ததால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 6 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.

அரக்கோணம் வின்டர்பெட்டி பகுதியில், ராம்கோ இண்டஸ்ட்ரியல் சிமென்ட் ஓடு தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று இரவு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த போது, கொதிகலன் (ஆட்டோ கிளேவ் ஸ்டீம்) திடீரென திறந்து கொண்டது. இதனால் அருகில் வேலை பார்த்து வந்த ஊழியர்கள் வசந்த் (24), முகமதுசபி (20), பங்கர் சாரூக் (20), ராகுல் (20), ஹைதர்அலி (21), ராம் (19) ஆகிய 6 பேர் தீக்காயம் அடைந்தனர். சக ஊழியர்கள் அவர்களை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஊழியர்கள் 6 பேரும் பலத்த தீக்காயமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக 6 பேரும் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.