தமிழக - கேரள எல்லையில் கரோனா சோதனை!

வாளையாறில் கோவை ஆட்சியர் நேரில் ஆய்வு
தமிழக - கேரள எல்லையில் கரோனா சோதனை!
வாளையாறில் ஆட்சியர் ஆய்வு

கேரள மாநில எல்லையாக விளங்கும் கோவை மாவட்டத்தின் 13 இடங்களில், கடுமையான கரோனா சோதனைக்குப் பின்பே மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதில், வாளையார் சோதனைச் சாவடியில் இன்று காலை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

‘‘கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது மாவட்ட நிர்வாகம். அவசியத்தின் அடிப்படையில் கோவை வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட்யின்மை சான்று அல்லது கரோனா தடுப்பூசி (2 தவணை) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும்.

அவ்வாறு சான்றிதழ்கள் இல்லாதபட்சத்தில், சோதனைச் சாவடிகளிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே மாவட்டத்திற்குள் உள்ளே அனுமதிக்கப்படுவர். மேலும், உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக காய்ச்சல் அறிகுறி தொடர்பாகவும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கேரளா மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதாலும் நிபா வைரஸ் பரவி வருதாலும் கேரள - தமிழக எல்லைப் பகுதிகளான வாளையார், முள்ளி, மேல்பாவியூர், வேலந்தபாளையம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம்,  மீனாட்சிபுரம், வழுக்குப்பாறை, ஆனைகட்டி உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறை, வருவாய் துறை மற்றும் காவல் துறைகளின் அலுவலர்களை கொண்ட குழுக்கள் மூலம் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.