பெசன்ட் நகர் கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

பெசன்ட் நகர் கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
சித்தரிக்கப்பட்ட படம்

சென்னை, திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன் (18). இவர், தாம்பரத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப் படிப்பு படித்து வந்தார்.

இன்று காலை (செப்.14) அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்கள் பார்த்திபன் (22), லோகேஷ் (24), பாலகிருஷ்ணன் (24) ஆகியோருடன் சேர்ந்து கமலநாதன் சென்னை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு சென்று மணற்பரப்பில் கால்பந்து விளையாடி உள்ளனர்.

விளையாடி முடித்த பின்னர் 4 பேரும் கடலில் இறங்கிக் குளித்திருக்கிறார்கள். அப்போது ராட்சத அலையில் சிக்கி கமலநாதன், பார்த்திபன் இருவரும் இழுத்துச் செல்லப்பட்டதைப் பார்த்த மீனவர்கள் உடனே ஓடி வந்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த பார்த்திபனைக் காப்பாற்றினார்கள். அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், கடல் அலையில் இழுத்து செல்லபட்ட கமலநாதனை மீட்க முடியவில்லை.

சம்பவம் குறித்து சாஸ்திரி நகர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவன் கமலநாதன் கடலில் அடித்துச் செல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.