உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே! 2023ல் வெற்றிப் பாதை; எதிலும் கவனம் தேவை; செல்வாக்கு கூடும்; குரு வழிபாடு!

உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே! 2023ல் வெற்றிப் பாதை; எதிலும் கவனம் தேவை; செல்வாக்கு கூடும்; குரு வழிபாடு!

உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இதுவரை உங்கள் திறமையில் இருந்து வந்த பின் தங்கிய நிலை இந்த ஆண்டில் இனி மாறும். முயற்சிகளில் தடைகள் வந்தாலும், இறைவனின் வல்லமையால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். பிரச்சினைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும்.

குடும்பத்தில் வீட்டில் சின்னச்சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உறவினர் வகையிலும் கூட மனஸ்தாபம் உருவாகலாம். சிலருக்கு விரும்பத்தகாத செய்தி ஒன்று தூரத்துலிருந்து வரலாம். கணவன், மனைவியரிடையே அன்பு மேலோங்கும்.

தொழிலில் தேவையில்லாத பண விரயம் ஏற்படலாம். கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். உங்கள் கூட்டாளிகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.

சிலர், வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனம் மிகமிக அவசியம். உத்தியோகஸ்தர்கள் உடன் வேலை செய்வோரின் ஆதரவால் பிரச்சினைகளைச் சமாளிப்பீர்கள். தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். காரிய அனுகூலம் கிடைக்கும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பெண்களுக்கு அதிக வேலைப்பளு உண்டாகலாம். எந்த வேலையிலும் கவனச் சிதறல் ஏற்படாமல் முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். அதனால் சிக்கல்கள் தீரும். பணிச்சுமையின் காரணமாக அசதி ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும்.

அரசியல்துறையினர் தீவிர முயற்சிக்குப் பின்னரே சிலருக்கு நடக்க வேண்டிய காரியங்கள் நல்லவிதமாக நடைபெறும். சில கட்டங்களில் நன்மை, தீமை கலந்தே நடைபெற்றாலும் இறுதியில் நன்மையே உண்டாகும்.

மாணவர்களுக்கு படிப்பில் நிதானமும் கவனமும் தேவை. சுற்றுலாச் செல்ல நேர்ந்தால் அனைவருடன் ஒற்றுமையாகப் பழகி பக்குவமாக நடந்து கொள்ளுதல் அவசியம்.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று, குரு பகவானை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். மனத்தெளிவு பிறக்கும். நம்பிக்கை துளிர்க்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in