உத்திரம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் பண வரவு; மதிப்பு கூடும்; வேலையில் பாராட்டு; சம்பளம் உயரும்!

உத்திரம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் பண வரவு; மதிப்பு கூடும்; வேலையில் பாராட்டு; சம்பளம் உயரும்!

உத்திரம் நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நல்ல பலன்களை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப் போனவை அனைத்தும் தாமாகவே வந்து சேரும். அறிவுத் திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாகப் பேசி பொழுதைக் கழிப்பீர்கள். மனோதைரியம் கூடும். மதிப்பு கூடும்.

தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாகப் பணிபுரிந்து பாராட்டுப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு - சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். பணியில் பாராட்டுகள் கிடைக்கும்.

குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. தங்க நகைகள் சேரும் காலகட்டம் இது.

பெண்கள் நீண்ட காலமாகச் செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும் மரியாதையும் கூடும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சாதுர்யமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து கூடும். காரியத் தடைகள் நீங்கும். செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

அரசியல் துறையினருக்கு வாழ்க்கைத் தரம் உயருவதற்கு எடுக்கும் முயற்சிகள் கை கூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம், கவனம் தேவை. வழக்கத்தை விட செலவுகள் கூடும்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்: ஸ்ரீதட்சிணாமூர்த்தியை நெய் தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். கடன் சுமை குறையும். தொழில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in