சதயம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் இன்னல்கள் தீரும்; செல்வம் சேரும்; வேலையில் கவனம்; நவக்கிரக வழிபாடு!

சதயம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் இன்னல்கள் தீரும்; செல்வம் சேரும்; வேலையில் கவனம்; நவக்கிரக வழிபாடு!

சதயம் நட்சத்திர அன்பர்களே!

பல்வேறு இன்னல்களுக்கிடையில் இருந்துவந்த நீங்கள், இந்த ஆண்டில் நன்மைகளை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினைகள் முடிவுக்கு வரும். செல்வம், உரிமை, அதிகாரம் முதலானவை கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தள்ளிப் போகலாம். எனினும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்வது நல்லது. தம்பதி இடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்குறைகள் ஒவ்வொன்றாக மாறும். பொருளாதார வளம் சிறப்படையும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள், ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.

உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தையுடனும் கவனத்துடனும் உழைக்க வேண்டியதிருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பெண்களுக்கு சிறப்பான பலன்கள் வந்து சேரும். சொத்து தொடர்பான பிரச்சினைகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். அக்கம் பக்கத்தினரிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மறைந்து அவர்கள் இல்லத்து விசேஷங்களுக்கு உங்களை முன் நிறுத்துவார்கள்.

கலைத்துறையினர் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கலைத்துறையில் சீரான நிலைமை இருக்கும். நல்லவிதமான ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள்.

அரசியல்துறையினர் சமூக சேவை செய்வோர் நல்ல செல்வாக்கோடு காணப்படுவீர்கள். கௌரவம் உயரும். அதிகம் பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பகுதி மிகவும் நன்றாக இருக்கும்.

மாணவர்கள் தீவிர முயற்சி எடுத்துப் படிப்பது அவசியமாகும். உடல்நலனைப் பொறுத்தவரை அடிக்கடி வயிறு உபாதைகள் ஏற்படும்.

பரிகாரம்: சிவன் கோயிலுக்குச் சென்று நவக்கிரக சந்நிதியை ஒன்பது முறை வலம் சென்று வழிபடவும். தோஷங்கள் அனைத்தும் விலகும். மனதில் நிம்மதி பெருகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in