பூராடம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் பொருளாதாரம் உயரும்; மரியாதை கூடும்; எதிலும் வெற்றி!

பூராடம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் பொருளாதாரம் உயரும்; மரியாதை கூடும்; எதிலும் வெற்றி!

பூராடம் நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். திருமண பாக்கியம் கை கூடும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். கணவன் மனைவியிடையே அன்பும் பாசமும் பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவார்கள்.

தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட அதிக வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். எதிரிகளால் இருந்து வந்த தொல்லை குறையும். அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகம் தொடர்பான ஒப்பந்தங்கள் நிறைவேறும். சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பெண்கள் குடும்பத்தில் நிதானமாக நடந்து கொள்ள வேண்டிய காலகட்டம் இது. தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிணக்கு நிலை மறைந்து உறவுகள் பிரகாசிக்கும்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். உங்கள் திறமைக்கு மற்றவர்கள் தலை வணங்குவார்கள்.

அரசியல்துறையினர், சமூக நல சேவை புரிபவர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சிகள் தேவை. அரசு காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக இருந்தாலும் எதையும் ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு அனுகூலமான போக்கு காணப்படுகிறது. எதிலும் வெற்றி காண்பீர்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். தீவிர முயற்சியால் எல்லாவித உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

பரிகாரம்: பெருமாளுக்கு நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றி வழிபட்டு வாருங்கள். கவலைகள் காணாமல் போகும். வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in