பூரம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் எதிலும் ஆதாயம்; குடும்பத்தில் அமைதி;காரியத்தில் வெற்றி; பண வரவு கூடும்!


பூரம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் எதிலும் ஆதாயம்; குடும்பத்தில் அமைதி;காரியத்தில் வெற்றி; பண வரவு கூடும்!

பூரம் நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் எதிலும் ஆதாயம் கிடைக்கும். குரு வாக்குஸ்தானத்தைப் பார்ப்பதால் பேச்சுத் திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடலில் உஷ்ணம் ஏற்படுத்தும் ஆகாரங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிப்போகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல், வேலைப் பளு இருக்கும். பணி நிமித்தமாக நேரத்திற்கு அதிகமாகவே உழைக்க வேண்டியதிருக்கும்.

குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு - மனை - வாகனம் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

பெண்கள் பேச்சுத் திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கலைத்துறையினருக்கு என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றமடைய உதவும். அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள்.

அரசியல் துறையினருக்கு தடைபட்டு வந்த காரியங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். ராசியாதிபதி சூரியனின் சஞ்சாரத்தின் மூலம் சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள்.

மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். உடல் ஆரோக்கியம் பெறும். வேலைப் பளு குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in