மூலம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் பணப்புழக்கம்; பிரிந்த உறவு சேரும்; நல்ல சேதி உண்டு!

மூலம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் பணப்புழக்கம்; பிரிந்த உறவு சேரும்; நல்ல சேதி உண்டு!

மூலம் நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளிலிருந்து இந்த ஆண்டில் விடுபடுவீர்கள். பின் தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும்.

குடும்பத்தில் தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. சிலருக்கு நல்ல பணப்புழக்கம் ஏற்படலாம். உறவினர்கள் அந்நியோன்யமாக இருப்பார்கள். குடும்பத்தில் கணவன் மனைவியருக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் சுமுகமாக மறையும். பிரிந்திருந்த உறவுகள் ஒன்றுசேரும்

தொழிலதிபர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். நண்பர்கள், உங்களை நம்பிக் காத்திருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்வார்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவார்கள். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும்.

பெண்களுக்கு பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. குடும்பத்தில் உங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம். அதனால் மன வேதனை ஏற்பட்டு மறையும். பிள்ளைகளால் தொந்தரவு ஏற்படும்.

கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். கிடைக்க வேண்டிய இடத்திலிருந்து பணம் கிடைக்காது. உடனிருப்போரால் பிரச்சினைகள் வரலாம்.

அரசியல்துறையினர் சீரான பலனை எதிர்பார்க்கலாம். மூத்த அரசியலமைப்பாளர்கள் உங்களுடைய பிரச்சினைகளை காது கொடுத்து கேட்டு முடித்து வைப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வந்து, உங்களை இன்பக் கடலில் ஆழ்த்தும்.

மாணவர்கள் சிரத்தையுடனும் கவனமுமாக எடுத்துப் படிப்பார்கள். ஆசிரியர்களிடம் பாராட்டுப் பெற்று சக மாணவர்களுடன் போட்டியிடுவீர்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில், சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு, மூன்று முறை வலம் வந்து வேண்டிக்கொள்ளுங்கள். குழப்ப நிலையில் இருந்து மீள்வீர்கள். மனதில் அமைதி தவழும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in