மகம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் வேதனை தீரும்; செயலில் வேகம்; புதிய நபர்களால் நன்மை!

மகம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் வேதனை தீரும்; செயலில் வேகம்; புதிய நபர்களால் நன்மை!

மகம் நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் ராசியை செவ்வாய் பார்க்கிறார். யோக பலனை அள்ளித்தரும் சுக்கிரனால் பலவகையிலும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த வேதனையும் சோதனையும் மாறும். உடல் ஆரோக்கியம் வலுப்பெறும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. அரசாங்க காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். புத்தி சாதுர்யம் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். பணியாளர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். அனுபவப் பூர்வமான அறிவு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாகப் பணிகளை செய்து முடிப்பார்கள். செயல்திறன் அதிகரிக்கும். உங்களுக்கான வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையை தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள்.

பெண்களுக்கு புத்திசாதுர்யம் அதிகரிக்கும். பயணங்களின்போது கவனம் தேவை. வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கலைத்துறையினருக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான சிந்தனை தோன்றும். எந்தக் காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

அரசியல் துறையினருக்கு சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்ல உறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயரை வெண்ணெய் சார்த்தி வணங்கிவாருங்கள். துன்பமும், தொல்லையும் நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in