ரேவதி நட்சத்திர அன்பர்களே! 2023ல் உழைத்தால் உயர்வு; பதவி ஏற்றம்; தொலைந்தது கிடைக்கும்; பெருமாள் வழிபாடு!

ரேவதி நட்சத்திர அன்பர்களே! 2023ல் உழைத்தால் உயர்வு; பதவி ஏற்றம்; தொலைந்தது கிடைக்கும்; பெருமாள் வழிபாடு!

ரேவதி நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டு, சில நன்மைகள் தரக்கூடிய வகையில் அமையும் காலகட்டம் இது. சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டால் பொருளாதார வகையிலும் வாழ்க்கைத் தரத்திலும் வளர்ச்சி உண்டாகும்.

எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொண்டு செயல்படவும். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சி செய்யுங்கள். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும்.

தொழிலதிபர்கள் உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மைகள் நடக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சம்பள உயர்வும் பதவி உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும்.

Karthikeyan

பெண்கள் நிறைய விஷயங்களில் காரியத்தாமதம் ஏற்படலாம். உத்தியோகம் பார்க்கும் பெண்கள் வேலையில் கவனச் சிதறல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். உங்கள் கௌரவம் நிலை நாட்டப்படும்.

கலைத்துறையினர் நல்ல பெருமையும் புகழும் கிடைக்கப் பெறுவீர்கள். கடினமாக உழைக்க வேண்டி வரும். மிகவும் பணிச்சுமையால் நேரத்திற்கு உணவருந்த முடியாமல் வாய்வுத் தொல்லை, வயிற்று உபாதைகள் ஏற்பட்டு சரியாகும்.

அரசியல்துறையினர் அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளைப் பெற முடியாமல் போகலாம். மக்கள் தொடர்பான பணிகளில் பணியாற்றும்போது கவனம் தேவை. நல்ல செல்வாக்கு, கௌரவம் கூடும்.

மாணவர்கள் நல்ல சிறப்பான பலன்களைக் காண்பீர்கள். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். நீராஞ்சன தேங்காய் தீபம் ஏற்றவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in