உத்திராடம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் சொத்துப் பிரச்சினை தீரும்; பதவி உயர்வு; ஆரோக்கியம் கூடும்; உதவி கிடைக்கும்!

உத்திராடம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் சொத்துப் பிரச்சினை தீரும்; பதவி உயர்வு; ஆரோக்கியம் கூடும்; உதவி கிடைக்கும்!

உத்திராடம் நட்சத்திர அன்பர்களே!

இந்த ஆண்டில் உங்களுக்கு நன்மைகள் ஏராளமாக நடக்கக் கூடிய கால கட்டமாக அமைந்திருக்கிறது. தேவைகள் பூர்த்தியாகி மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் உருவாகும். வெகு நாட்களாக தடைப்பட்டு வந்த திருமண வேலைகளையும் புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது துவங்கலாம்.

குடும்பத்தில் தாய்வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அமைதியாக விட்டுக்கொடுத்து போவதால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும். நீங்கள் நல்வழியில் செல்ல பெரியோர் ஒருவரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தொழில்புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். படிப்படியாக லாபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வேலைகளுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும். சிறு தொழில் நடத்துபவர்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பெண்கள் நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். தொழில் புரியும் பெண்கள் நல்ல ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். சேமிப்புகள் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை இருக்கும். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட இப்போது நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும்.

அரசியல்துறையினருக்கு மூத்த அறிஞர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம். அரசியல்வாதிகள் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. தேவையில்லாத இடங்களில் வாக்குறுதி கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.

மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். கடந்த சில நாட்களாக இருந்த மந்த நிலை அடியோடு மாறும். மருத்துவச் செலவு குறையும்.

பரிகாரம்: திங்கள்தோறும் விரதமிருந்து அம்பாளையும் சிவனையும் வணங்குங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in