
அனுஷம் நட்சத்திர அன்பர்களே!
உங்களுக்கு இந்த ஆண்டில் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். வீணான ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்தவொரு செயலையும் யோசித்துச் செயல்படுத்துவது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும். பேச்சில் நிதானம் தேவை.
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடைகள் ஏற்படலாம். திட்டமிட்டு செயலாற்றுவதன் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.
குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடைவீர்கள். கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மனதில் ஆன்மிகச் சிந்தனைகள் மேலோங்கும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போது கவனம் தேவை.
பெண்கள், எந்தச் செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும்.
கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.
அரசியலில் இருப்பவர்கள், இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றைச் சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வாருங்கள். எல்லா நன்மைகளையும் பெறுவீர்கள். மனோதிடம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்