சித்திரை நட்சத்திர அன்பர்களே! 2023ல் எதிர்ப்புகள் விலகும்; முயற்சியில் வெற்றி; பணவரவு உண்டு;தெளிவு கிடைக்கும்!

சித்திரை நட்சத்திர அன்பர்களே! 2023ல் எதிர்ப்புகள் விலகும்; முயற்சியில் வெற்றி; பணவரவு உண்டு;தெளிவு கிடைக்கும்!

சித்திரை நட்சத்திர அன்பர்களே!

இந்த ஆண்டில் வாக்குவன்மையால் எதையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காட்டுவீர்கள்.

குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்பச் செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளைக் கேட்பார்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள்.

பெண்களுக்கு புத்திசாதுர்யம் அதிகரிக்கும். பயணங்களின்போது கவனம் தேவை. வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பொருட்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு தேவையில்லாத விஷயங்களுக்கும் திடீர் கோபங்கள் உண்டாகலாம். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாதுர்யத்தால் எதையும் சமாளிப்பீர்கள். எந்தவொரு விஷயத்தையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண்பது நல்லது. தெளிவான சிந்தனைகள் தோன்றும். எந்தக் காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அரசியல் துறையினர், சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமைகள் வெளிப்படும். ஆசிரியர்களுடன் நல்லுறவு ஏற்படும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.

பரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரியத் தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in