அஸ்தம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் காரியத்தில் திறமை; பண வரவு; வீண் பேச்சு வேண்டாம்; சொத்துகளில் கவனம்!

அஸ்தம் நட்சத்திர அன்பர்களே! 2023ல் காரியத்தில் திறமை; பண வரவு; வீண் பேச்சு வேண்டாம்; சொத்துகளில் கவனம்!

அஸ்தம் நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் எண்ணிய காரியங்களைத் திறமையாகச் செய்து முடிப்பீர்கள். பணவரவும் இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். சில முக்கியமான முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துகள் மீது கவனம் தேவை.

தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். சிற்றின்பச் செலவுகள் கூடும். அக்கம்பக்கத்தினரிடம் கவனமாகப் பேசுவதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் நல்லது.

பெண்கள், சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கலைத்துறையினருக்கு எல்லாவகையிலும் நன்மைகள் உண்டாகும். தன லாபம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

அரசியல்துறையினருக்கு கோபத்தால் சில்லறைச் சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். மந்த நிலை மாறும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிப்பது நல்லது. கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

பரிகாரம்: முருகப் பெருமானை கந்தசஷ்டி பாராயணம் செய்து, வழிபடுவது எல்லா நன்மைகளையும் தரும். அலைச்சலைத் தவிர்க்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in