சுவாதி நட்சத்திர அன்பர்களே! 2023ல் நிதியுதவி உண்டு; காரியத்தில் வெற்றி;பணிச்சுமை குறையும்; எதிர்ப்புகள் விலகும்!

சுவாதி நட்சத்திர அன்பர்களே! 2023ல் நிதியுதவி உண்டு; காரியத்தில் வெற்றி;பணிச்சுமை குறையும்; எதிர்ப்புகள் விலகும்!

சுவாதி நட்சத்திர அன்பர்களே!

உங்களுக்கு இந்த ஆண்டில் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். செவ்வாயால் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.

தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து காணப்படுவீர்கள். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றைச் செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பைப் பெறுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம். மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றத்துக்கு உதவும். அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களைச் செய்து வெற்றி பெறுவீர்கள்.

அரசியல் துறையினருக்கு தடைபட்டு வந்த காரியங்களில் இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்கும். ராசியாதிபதி சஞ்சாரத்தின் மூலம் சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள்.

மாணவர்கள் தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்கி வாருங்கள். எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலையே காணப்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in