சனிப்பெயர்ச்சி: விசாகம் அன்பர்களே! எதிலும் லாபம்; ஆரோக்கியம் கூடும்; வெற்றிப்பாதை; இல்லத்தில் சந்தோஷம்!

சனிப்பெயர்ச்சி: விசாகம் அன்பர்களே! எதிலும் லாபம்; ஆரோக்கியம் கூடும்; வெற்றிப்பாதை; இல்லத்தில் சந்தோஷம்!

இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!

உங்கள் எல்லோருக்கும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

விசாகம்:

சனி பகவான் உங்களின் எட்டாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

குருவின் அம்சத்தில் பிறந்த நீங்கள் அடுத்தவருக்காக அதிகம் உழைப்பவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்குத் தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கிக் கொடுப்பீர்கள்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தம் மூலம் சிறப்பான வளர்ச்சி காண்பீர்கள். புகழும் விருதுகளும் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு கௌரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உங்களின் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.

கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

பெண்கள், கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரவு திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு பாடங்களைப் படிப்பீர்கள்.

பரிகாரம்: முருகப்பெருமானை தரிசித்து வாருங்கள். தடைகள் அனைத்தும் நீங்கும்.இந்த சனிப்பெயர்ச்சியால், உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

65% நற்பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in