சனிப்பெயர்ச்சி: உத்திரட்டாதி அன்பர்களே! தடை விலகும்; கூடுதல் உழைப்பு; பிள்ளைகளால் பெருமை; முயற்சியில் வெற்றி!


சனிப்பெயர்ச்சி: உத்திரட்டாதி அன்பர்களே! தடை விலகும்; கூடுதல் உழைப்பு; பிள்ளைகளால் பெருமை; முயற்சியில் வெற்றி!

இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!

உங்கள் எல்லோருக்கும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

உத்திரட்டாதி:

சனி பகவான் உங்களின் இருபத்தி ஐந்தாவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

குரு, சனி ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு அதிகமான உழைப்பில் நாட்டம் இருக்கும்.

இந்த சனிப்பெயர்ச்சியில் பணவரத்து கூடும். ஆன்மிகப் பயணங்களும் அதனால் செலவுகளும் உண்டாகும். காரியத்தடை மற்றும் தாமதம் விலகும். ஆனாலும் அந்தக் காரியத்தைச் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அந்நிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேறத் தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாகப் பணிகளைக் கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதுர்யத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு தொல்லைகள் கொடுத்தவர்கள் ஒதுங்கிச் செல்வார்கள். உங்கள் வேலைகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

அரசியல்வாதிகளுக்கு இதுவரை இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

பெண்களுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைகள் முற்றிலுமாக நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.

பரிகாரம்: முன்னோர்களை தீபம் ஏற்றி வணங்கிவாருங்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இந்த சனிப்பெயர்ச்சியால், பொறுப்புகள் அதிகரிக்கும்.

63% நல்ல பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in