சனிப்பெயர்ச்சி: அஸ்தம் அன்பர்களே! உடலில் சோர்வு; மனதில் தைரியம்; முயற்சியில் வெற்றி; வாக்குவாதம் வேண்டாம்!

சனிப்பெயர்ச்சி: அஸ்தம் அன்பர்களே!  உடலில் சோர்வு; மனதில் தைரியம்; முயற்சியில் வெற்றி; வாக்குவாதம் வேண்டாம்!

இனிய காமதேனு இணையதள வாசக அன்பர்களே!

உங்கள் எல்லோருக்கும் எல்லா நல்லதுகளும் நடந்தேற என் வாழ்த்துகள்; பிரார்த்தனைகள்.

சனிப்பெயர்ச்சி:

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி:

தை மாதம் 04ம் தேதி - 18.01.2023 - புதன்கிழமை

வாக்கியப் பஞ்சாங்கப்படி:

பங்குனி 15ம் தேதி - 29.03.2023 - புதன்கிழமை

அஸ்தம்:

சனி பகவான் உங்களின் பதினோராவது நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து மூன்றாம் பாதத்திற்கு மாறுகிறார்.

புதன் - சந்திரன் அம்சத்தில் பிறந்த நீங்கள் மனம் சார்ந்து முடிவுகளை எடுப்பவர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சியில் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனக்கஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோதைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அடையப் பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.

கலைத்துறையினர் புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களும், ரசிகர்களும் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள்.

அரசியல்வாதிகள் கடினமாக உழைத்து, உங்கள் முழுத் திறமையையும் வெளிக்கொணர்வீர்கள். வருமானமும் சீராகவே இருக்கும்.

பெண்களுக்கு மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும்.

மாணவர்களுக்கு பாடங்களைப் படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாத வகையில் தடங்கல்கள் ஏற்படலாம்.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வாருங்கள். எதிலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் அகலும். இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு பண வரவு கூடும்!

70% நல்ல பலன்கள் ஏற்படும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in